Krishna Jayanthi 2021: கண்ணன் அருளை அள்ளித் தரும் இந்த நெய்வேத்தியங்கள்!!

சில தெய்வங்களை மட்டும் தோழனாக, சகோதரனாக, வழிகாட்டியாக, குருவாக, காதலனாக, குழந்தையாக என பல வடிவங்களிலும் கற்பனை செய்து கொள்கிறோம். அப்படி அனைத்து வகைகளிலும் நம் மனங்களில் வியாபித்து இருக்கும் ஒரு தெய்வம்தான் கண்ணன்!!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 29, 2021, 05:01 PM IST
Krishna Jayanthi 2021: கண்ணன் அருளை அள்ளித் தரும் இந்த நெய்வேத்தியங்கள்!! title=

Krishna Jayanthi 2021: இந்து தர்மத்தில் தெய்வங்களுக்கு பஞ்சமில்லை. எனினும், சில தெய்வங்களை நாம் தெய்வங்களாக மட்டும் பார்க்கிறோம். சில தெய்வங்களையோ, தோழனாக, சகோதரனாக, வழிகாட்டியாக, குருவாக, காதலனாக, குழந்தையாக என பல வடிவங்களிலும் கற்பனை செய்து கொள்கிறோம். அப்படி அனைத்து வகைகளிலும் நம் மனங்களில் வியாபித்து இருக்கும் ஒரு தெய்வம்தான் கண்ணன்!!

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வடும் தேய்பிறை அஷ்டமி கிருஷ்ணாஷ்டமியாக (Krishnashtami) கொண்டாடப்படுகின்றது. கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ணாஷ்டமி என்று பல பெயர்களில் கண்ணனின் பிறந்தநாள் நாடு முழுதும் கொண்டாடப்படுகின்றது.

தேவகிக்கும் வசுதேவருக்கும் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த கண்ணன், கோகுலத்தில் யசோதைக்கும் நந்தகோபருக்கும் மகனாக வளர்ந்தார். கன்ணனின் வாழ்க்கையே ஒரு பாடம்தான். வாழ்வின் அனைத்து சிக்கல்களிலும் இருந்து எப்படி வெளி வருவது என்பதையும், தர்மமும், கடமை உணர்ச்சியும் என்றும் தவறாமல் இருக்க வேண்டும் என்றும் அவர் பகவத் கீதையில் உபதேசம் செய்தார்.

மூன்று வயது வரை கோகுலத்திலும், 3 - 6 வயது வரை பிருந்தாவனத்திலும், 7 வயதில் கோபியர் கூட்டத்திலும், 8 - 10 வயது வரை மதுராவிலும் கண்ணனின் இளம் வயது கழிந்தது. தனது ஏழாவது வயதில் கம்சனை வதம் செய்து பெற்றோரை விடுவித்தான் கண்ணன். 

கண்ணனை வீட்டுக்குள் அழைப்பது எப்படி?

கிருஷ்ண ஜெயந்தி அன்று, கண்ணனின் (Lord Krishna) கால் வரைந்து அவனை வீட்டிற்குள் அழைப்பது நம் வழக்கம். வீட்டிற்கு அழைத்ததும் கண்ணனுக்கு பிடித்த எந்தெந்த உணவுகளை நாம் அவனுக்கு படைக்கலாம்? இதோ, கண்ணனுக்குப் பிடித்த சில நெய்வேத்தியங்கள்!!

கிருஷ்ணர் ஜெயந்தி அன்று பொதுவாக வெண்ணெய், அவல் பாயசம், அவல் லட்டு, உப்பு சீடை, வெல்ல சீடை, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம், வெண்ணை பால்திரட்டு, ரவா லட்டு, ஆகியவற்றை செய்து படைப்பது வழக்கம். இவற்றுடன் பலவித பழங்களும் படைக்கப்படுகின்றன.

கண்ணனை கள்வனாக்கிய வெண்ணெய்:

கண்ணனுக்கு வெண்ணெய் பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். கண்ணனை கள்வனாக்கியதே வெண்ணெய்தானே!! அந்த வெண்ணையை வைத்து ‘வா கண்ணா’ என நாம் பக்தியோடு அழைத்தால் கண்ணன் வராமல் இருக்க மாட்டான்.    

ALSO READ: நாடுமுழுவதும் கலைகட்டும் கிருஷ்ணா ஜன்மாஷ்டமி பண்டிகை....

கண்ணன் அருளை அள்ளித் தரும் அவல் 

அவல் கண்ணனுக்கு மிகவும் பிடித்தது. கண்ணனின் சிறு வயது தோழரான குசேலர் அவரைக் காண வரும்போது அவருக்குப் பிடித்த அவலைத் தான் கொண்டு வந்தார். அவல் அளித்த குசேலரை கண்ணன் கோபுரத்தில் கொண்டு வைத்தார். பொருளாதார நிலை சீரடைய வேண்டுபவர்கள் முக்கியமாக அவல் பாயசம் செய்து படைக்கலாம். 

உலகலந்த பெருமாளுக்கு உப்பு சீடை

அரிசி மாவையும் உளுந்து மாவையும் வெண்ணெய் கலந்து உருண்டைகளாய் உருட்டி எண்ணெயில் பொறித்து எடுத்து கண்ணனுக்குப் படைத்தால், அவன் சப்புக் கொட்டி சாப்பிட்டு விட்டு, அளவில்லாமல் அருளிச் செல்வான். 

வெல்லம் போல் இனிய கண்ணனுகு வெல்லச் சீடை.

சீடை கண்ணனுக்குப் பிடித்த பலகாரம். வெல்லப் பாகை சீடை மாவில் கலந்து அதை உருண்டையாய் உருட்டி பொறித்து எடுத்தால், கண்ணன் வெல்லப் பாகாய் உருகிப் போவான். நம் வீட்டில் உள்ள சின்னக் கண்ணன்களும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

வினோத கண்ணனுக்கு வித விதமாய் லட்டு

மண்ணை உருண்டையாக உண்ட கண்ணனுக்கு உருண்டையாய் இருக்கும் அனைத்து லட்டு வகைகளும் பிடிக்கும். வழக்கமாக இந்த நாளில் ரவையால் ஆன லட்டு செய்வது விசேஷம். ரவையையும் சர்க்கரையையும் அரைத்து, அதில் பால், நெய், தேங்காய் கலந்து லட்டாகப் பிடித்து கண்ணனுக்குப் படைத்தால் விருப்பத்துடன் அவன் உண்பான்.

ALSO READ: வடமாநிலங்களில் களைகட்டிய கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்...

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News